சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருப்பார்-கெஜ்ரிவால்

0 225

அடுத்த ஆண்டு நடக்க உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் அரசியல் வெற்றி வியூகங்களை வகுப்பதில் பிரசாந்த் கிஷோர் முக்கியமானவராக கருதப்படுகிறார்.  இந்திய அரசியல் செயல் குழு என்ற அவரது அமைப்பு மோடி, நிதிஷ் குமார், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பிரபல தலைவர்கள் ஆட்சியைப் பிடிக்க உதவியாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் ஆட்சியை தக்கவைப்பதில் பாரதீய ஜனதாவுடன் கடும் போட்டியை சந்திக்க நேரிடும் என்பதால், ஆம் ஆத்மி கட்சி பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடி உள்ளது.  2014 ஆம் ஆண்டு முதல் பல தேர்தல் வெற்றி வியூகங்களை சாதித்து காட்டியவர் பிரசாந்த் கிஷோர் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments