பொறியாளரை தாக்கிய 5 பேருக்கு சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸ் வலைவீச்சு

0 190

புதுசேரியில் பொறியாளரை தாக்கிய 5 பேர் கும்பலை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

செல்லப்பெருமாள்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுப்பணித்துறை பொறியாளரான செல்வராஜ், 9-ந் தேதி மாலை பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது, சத்யா நகர் அருகே அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் தாக்கினர்.

அருகிலிருந்தோர் வந்ததும் 5 பேரும் ஓடிவிட்டனர். புகாரின்பேரில் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, செல்வராஜை தாக்கிய செயின்பால்பேட்டையை சேர்ந்த நிவாஸ், திருவள்ளுவர் நகரை சேர்ந்த சந்துரு, அருண், திலாஸ்பேட்டையை சேர்ந்த கிஷோர், ஜீவானந்தபுரத்தை சேர்ந்த தமிழை போலீசார் தேடி வருகின்றனர். 5 பேரை கைது செய்தால்தான், தாக்குதலுக்கான காரணம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Watch Polimer News Online: https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments