தலைமை செயலக 3ஆவது மாடியிலிருந்து குதித்த பெண் பத்திரமாக மீட்பு

0 243

மகாராஷ்டிரா தலைமை செயலக 3ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர், உயிருடன் காப்பாற்றப்பட்டார்.

பழச்சாறு விற்பனை நிலையம் நடத்திவந்த பிரியங்கா குப்தா என்ற பெண்ணும், அவரது கணவரும் தகராறு ஒன்றில், போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதுடன் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு நீதி கேட்கும் விதமாக தலைமை செயலகம் வந்த பிரியங்கா குப்தா, அலுவலகத்தின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். ஆனால் வளாகத்தை சுற்றிலும் கட்டப்பட்டிருந்த வலையில் அவர் விழுந்ததால் பத்திரமாக மீட்கப்பட்டார்.

ஏற்கெனவே ஒரு நபர், இதுபோல மாடியிலிருந்து குதித்ததால், பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டிடத்தை சுற்றிலும் வலை அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments