அசாமில் ஊரடங்கு உத்தரவு தளர்வு..!

0 472

அசாமில், கவுஹாத்தி, திப்ரூகரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து, அசாம் மாநிலத்தின் பல இடங்களில் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கவுஹாத்தி, திப்ரூகர் ஆகிய இடங்களில் இன்று ஊரடங்கு உத்தரவை காவல்துறையினர் தளர்த்தியுள்ளனர். கவுஹாத்தியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், திப்ரூகரில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் , டீசல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வருகின்றனர். அதேநேரத்தில் அரசு பேருந்துகள் எதுவும் இன்று இயக்கப்படவில்லை. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களும் திறக்கப்படாமல் மூடி கிடக்கின்றன.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments