டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

0 116

டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவிவருவதால், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக  நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, உறைபனியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கனமழை மற்றும்  பனிப்பொழிவால் கங்கோத்ரி, யமுனோத்ரி பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உத்ரகாசி (Uttarkashi) மாவட்டத்தில் உள்ள சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உறைபனியால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல கிராமங்களில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments