விறுவிறுப்படைந்த வேட்புமனுத் தாக்கல்..!

0 333

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கட்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

கும்பகோணம் அடுத்த கொரனாட்டுக்கருப்பூர், கொற்கை, கடிச்சம்பாடி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட சுயேட்சைகள் ஏராளமானோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உழவு மாடுடன் வந்து வேட்பாளர் ஒருவர் மனுத் தாக்கல் செய்தார். வெள்ளானூர் ஊராட்சியில் 4வது வார்டுக்கு போட்டியிடும் மளிகை கடை வியாபாரி சின்னசாமி ஊராட்சி அலுவலகத்திற்கு காளைமாட்டுடன் வந்து மனுவை அளித்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுக்களை அளித்தனர். முசிறி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் யூனியன் அலுவலகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு மனு தாக்கல் செய்ய பெண்கள் ஆர்வமுடன் திரண்டனர். ஆவுடையார்கோயில் மணமேல்குடி பகுதியில் உள்ளாட்சிதேர்தலுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். 

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஒன்றியங்களிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

 

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கிராம வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிடுவதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

 

அதே போல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெண்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments