அரசுப் பேருந்துகளில் பொங்கல் முன்பதிவு இன்று தொடக்கம்

0 292

அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொங்கல் பண்டிகையைக் கொண்டாட லட்சக்கக்கணக்கானோர் செல்வது வழக்கம். அரசு விரைவுப் பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

எனவே, பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர், இந்த வசதியைப் பயன்படுத்தி இன்றுமுதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். கூட்ட நெரிசலைப் பொறுத்து, பொங்கலையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருநதுகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையையொட்டி, தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டநிலையில், பேருந்துகளில் ஏராளமானோர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments