கங்கையை தூய்மைப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை

0 226

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார். 

கான்பூரில் நடைபெறும் இக்கூட்டத்தில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட கங்கை நதி பாயும் 5 மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் கங்கையை தூய்மைப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் போதிய பலனைத் தரவில்லை என்பதால் மோடியின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

கங்கையின் கவுமுக் பகுதியில் இருந்து கங்கா சாகர் வரை மாசு அகற்றி படகு போக்குவரத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதால், விசைப் படகில் பயணித்து இதனை மோடி ஆய்வு செய்ய உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments