வழிபறியில் சிக்கிய பணம்.. வழிபோக்கர்கள் போட்ட நாடகம்..!

0 383

சென்னையில் பண பரிமாற்றம் செய்யும் இடைத் தரகரை தாக்கி வழிப்பறி செய்ய முயன்ற 7 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவத்தின் போது தவறி விழுந்த 18 லட்சம் பணப்பையை எடுத்து பங்கிட்டு கொண்ட வழிப்போக்கர்கள் தாமாக வந்து சிக்கிய பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி...

சென்னை எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக் ஆபியா பாரக் பிரைவேட் லிமிடேட் பணபரிமாற்றம் செய்யும் நிறுவனத்தின் பணிபுரிகிறார். நேற்றிரவு மண்ணடியில் உள்ள அலுவலகத்திலிருந்து சுமார் 18 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது முதலாளியிடம் கொடுக்க திருவல்லிக்கேணிக்கு சென்றுள்ளார். மூர் தெரு ஐசிஐசிஐ வங்கி அருகே வந்த போது 3 இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 7 பேர் அபுபக்கர் சித்திக்கை தலைகவசத்தால் அவரது ஹோண்ட ஆக்டிவா இருச்சக்கர வாகனத்தில் தாக்கி கீழே தள்ளியுள்ளனர். சீட்டின் கீழிருந்த பையை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதனிடையே சம்பவ இடம் வந்த வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார், தாக்கப்பட்ட அபுபக்கரிடம் விசாரணை நடத்தினர். பையில் வைத்திருந்த 18 லட்சம் வழிபறி செய்யப்பட்டுவிட்டதாக அவர் கொடுத்த புகாரில் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் தர்மதுரை என்பவர் காவல் நிலையத்திற்கு வந்து ஐசிஐசிஐ வங்கி அருகே ஒரு பணப்பை கிடந்ததாக ஒப்படைத்துள்ளார்.

அதில் இருந்த பணத்தை எண்ணி பார்த்த போது அதில் 8 லட்சம் மட்டுமே இருந்துள்ளது. மீதமுள்ள பணம் குறித்து கேட்க தனக்கு தெரியாது கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரது வீட்டிற்கு சோதனை நடத்திய போது அங்கு 8 லட்ச ரூபாயை அவர் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் உண்மையை ஒப்புகொண்டு தர்மதுரை, மீதமுள்ள 2 லட்ச ரூபாயை வழக்கறிஞர்கள் 3 பேர் கமிஷனாக பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

குழப்பமடைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்த போது தான் உண்மை தெரிந்தது. அபுபக்கரை தாக்கிய வழிபறி கொள்ளையர்கள் பணம் இருந்த பை என நினைத்து வேறொரு பையை எடுத்து சென்றுவிட, அபுபக்கர் கையில் இருந்த பண பை சற்று தள்ளி விழுந்துள்ளது. அவ்வழியாக வந்த தர்மதுரை இதை கவனித்து இந்த பையை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் சிசிடிவியில் இதை பார்த்துவிட்டால் சிக்கிக் கொள்வோமே என்ற பயமும் ஒரு பக்கம் இருந்ததால், குறிப்பிட்ட தொகையை எடுத்து வைத்துக் கொண்டு வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு எழுதி வாங்கிக் கொண்டால் சிக்கல் வராது என திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி 8 லட்சத்தை எடுத்து வீட்டில் வைத்துக் கொண்டு, 2 லட்சத்தை வழ்க்கறிஞர்களுக்கு கமிஷனாக கொடுத்து இந்தவிட்டு நல்லவர் போல காவல் நிலையத்தில் வந்து பணத்தை ஒப்படைத்துவிட்டார். வழிபோக்கனாக வந்து வழிபறியில் கிடைத்த பணத்தை நாடகம் போட்டு பங்கிட்டு கொண்ட தர்மதுரை மற்றும் உடந்தையாக இருந்த வழக்கறிஞர்கள் என 4 பேரிடமும் விசாரணை நடத்தி வரும் வடக்கு கடற்கரை போலீசார் வழிபறி கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments