அசாம் மாநிலத்தில் நடைபெற இருந்த போட்டிகள் ரத்து

0 307

அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருவதன் எதிரொலியாக இன்று நடைபெற இருந்த ரஞ்சி டிராபி, ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. இதன் எதிரொலியாக இன்று நடைபெற இருந்த ரஞ்சி டிராபி மற்றும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

அசாம் மற்றும் சர்வீசஸ் அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியும், சென்னையின் எப்.சி. மற்றும் கவுகாத்தி எப்.சி. அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஐ எஸ் எல் கால்பந்து போட்டியும் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments