நிர்பயா வழக்கில் குற்றவாளியின் மனுவை எதிர்த்து நிர்பயாவின் தாயார் வழக்கு

0 229

நிர்பயா வழக்கில் குற்றவாளி தாக்கல் செய்த சீராய்வு மனுவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

டெல்லி நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங், உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது வரும் 17 ஆம் தேதி மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனையை நிறைவேற்றக்கோரி நிர்பயாவின் தாயார் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவும் 17-ந்தேதி விசாரிக்கப்பட உள்ளது.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments