நேரடி அன்னிய முதலீடு அதிகரிப்பு..

0 191

நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 375 கோடி ரூபாய் நேரடி அன்னிய முதலீடு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பொருளாதார மந்தகதியை போக்க மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார். பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் வந்த வெளிநாட்டு முதலீட்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் வந்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களுக்கான  நிலுவைத் தொகைகளை உடனே வழங்கவும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் வழங்கும் அமைப்புகளுக்கு நிதி உதவி செய்து சில்லறைக் கடன் வசதியை அதிகரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments