டி-20 உலகக்கோப்பைக்கு முன்னதாக புதிய வீரர்களை தயார் செய்யும் பணி தீவிரம்

0 113

20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக புதிய வீரர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சிகள் அளித்து வருவதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார், நாளை மறுநாள்  நடைபெற உள்ள முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்பது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

தீபக் சாஹர் சிறந்த வீரர், பந்தை இரு பக்கங்களிலும் ஸ்விங் செய்யக்கூடியவர், சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட தேவையான அனைத்து திறமைகளும் அவரிடம் உள்ளது என்றும் பரத் அருண் கூறினார்.

ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் மூன்று பரிமாணங்களில் சிறப்பாக செயல்பட கூடிய வீரராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments