பாகிஸ்தானில் சர்வதேச தீவிரவாதத்தின் காலடிகள் - இந்தியா கடும் கண்டனம்

0 226

சர்வதேச தீவிரவாதத்தின் காலடி ஒவ்வொன்றும் பாகிஸ்தானின் வழியாகவே செல்கிறது என்று இந்தியா கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளது.

ஐ.நா. பொதுச்சபையில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பற்றி பேசிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இவ்வாறு கூறி இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவு ரத்து, தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி பேசியதற்கு ஐ.நாவுக்கான நிரந்தர இந்திய தூதுக்குழுவின் முதன்மை செயலர் பவுலோமி திரிபாதி கண்டனம் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பேச்சு, கோழிக்கூட்டுக்கு காவல் இருக்கும் நரியைப் போன்றது என்றார் அவர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக இருக்கிறது என்ற அவர், இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளார்.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments