நீட் தேர்வில் இருந்து எந்த மாநிலத்திற்கும் விலக்கு கிடையாது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

0 379

தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடையாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் ஆகியோர், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கை 1956 ஆம் ஆண்டின் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்திற்கு முரணாக இருப்பதால், சுகாதாரத்துறை அமைச்சகம் ஆதரவளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி நடத்தப்படும் நீட் தேர்வு, எவ்வித விலக்கு அளிப்பதற்கும் இடமின்றி நாடு முழுவதற்கும் பொருந்தும் என்று விளக்கம் அளிக்கப்ட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும், நீட் தேர்வை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments