பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை - ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேறியது

0 1134

பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டம் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் நிறைவேறியது.

பாலியல் குற்றவழக்குகளை விரைந்து முடிக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் உறுதியளித்திருந்தார்.

தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் புதிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட திஷா சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆந்திர பிரதேச குற்றவியல் சட்டம் 2019 எனும் இந்த புதிய சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்கிறது.

மேலும் பாலியல் வழக்குகளை 14 நாட்களுக்குள் விசாரித்து முடிக்கவும், 21 நாட்களுக்குள் தீர்ப்பளிக்கவும் வகை செய்கிறது. 

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments