ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இந்திய பயணம் ரத்து

0 304

வங்கதேச அமைச்சர்கள் இருவரின் இந்தியப் பயணம் ரத்தான நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயின் வருகையும் ரத்தாகி உள்ளது. 

டிசம்பர் 15 முதல் 17 ஆம் தேதி வரை குவஹாத்தியில் நடக்க இருந்த இந்திய-ஜப்பான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் அபே வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அவரது வருகை ரத்தானது பற்றி டுவிட்டரில் அறிவித்துள்ள  வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இந்த உச்சி மாநாட்டை வேறு தேதியில் நடத்த இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன என  கூறி உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறைப் போராட்டம் வலுத்துள்ளது.

ஜப்பான் பிரதமர் அபேயை வரவேற்று குவஹாத்தியில் வைக்கப்பட்ட பேனர்களை போராட்டக்காரர்கள்  கிழித்து எறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அவரது வருகை ரத்தாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments