திருப்பதியில் பால் லாரி சக்கரத்தில் விழுந்து பக்தர் தற்கொலை... போலீசார் தீவிர விசாரணை

0 413

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தின் முன் விழுந்து பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அபிஷேகம் செய்வதற்காக பால் ஏற்றி வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தின் முன்பு, 45 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவர் திடீரென படுத்தார். அடுத்த சில நொடிகளில் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இறந்தவர் யார், எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவிலில் தோஷ பரிகாரம் செய்யப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கப்பட்டது. இதுபோல் தற்கொலை செய்தால் மோட்சம் கிட்டாது, பாவத்தையே சேர்க்கும் என்று தேவஸ்தான ஆகம ஆலோசகர் ரமண தீட்சிதர் தெரிவித்தார்.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments