மருத்துவமனை வளாகத்தில் மூட்டை மூட்டையாக பணம்..! சென்னையில் பறிமுதல்

0 809

சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணக் கட்டுகள், சில்லரைகள் கொண்ட மூட்டைகளை  போலீஸார் பறிமுதல் செய்தனர். 

சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மர்மமான முறையில் மூட்டைகள் வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கேகே நகர் போலீசார், விரைந்து வந்து கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

அதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருவள்ளூரை சேர்ந்த ஐயப்பன் என்பவர், சென்னையில் வியாபாரிகளிடம் இருந்து 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்று கேரளாவில் 10 ரூபாய் கட்டுகளாக சில்லரையாக மாற்றி வரும் தொழிலை தாம் செய்து வருவதாகவும், அதன்படி இன்று காலை கேரளாவில் இருந்து தனியார் பேருந்து மூலம் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய் கட்டுகள், சில்லரைகள் அடங்கிய மூட்டைகளுடன் வந்ததாகவும் குறிப்பிட்டார்.

கேகே நகர் உதயம் திரையரங்கம் அருகே வந்திறங்கிய தன்னை அழைத்துச் செல்ல வரவேண்டிய கார் வருவதற்கு தாமதமானதால் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மூட்டைகளை வைத்துவிட்டு காத்திருந்ததாகவும் ஐயப்பன் கூறினார்.

இதனையடுத்து போலீஸாரும் மூட்டைகளை ஆய்வு செய்தனர். அப்போது 20 லட்சம் ரூபாய்க்கு 10 ரூபாய் நோட்டுகளும், 7 லட்சம் ரூபாய்க்கு சில்லறைகளும் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இருப்பினும் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கேகே நகர் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் உரிய ஆவணத்தை அளித்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் ஐயப்பனிடம் கே.கே. நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மூட்டைகளில் இருந்த பணம், கணக்கில் வராத பணமா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments