ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

0 291

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த  நீதிபதிகள் சத்தியநாரயணன்,  சிபிஐ-யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசுத்தரப்பில் அளித்த விளக்கத்தை  ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பாத்திமா லத்தீப் மரணம்  மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதன் காரணமாக போராட்டத்தையும் ஏற்படுத்தியது என்று சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், அந்த அடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சிபிஐ-க்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

தற்போது விசாரிக்கும் சென்னை மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் விசாரணை அறிக்கையை ஜனவரி 22ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments