பாஸ்போர்ட்டுகள் மீது தாமரை சின்னம் ஏன்? மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

0 594

புதிதாக வழங்கப்படும் பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் பதிக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பிய நிலையில், போலி பாஸ்போர்ட்டுகளைக் கண்டறிந்து களைவதற்காக தேசிய சின்னங்களை பாஸ்போர்ட் மீது பதிவிடுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், தாமரை மலர் நம் நாட்டின் தேசிய சின்னங்களில் ஒன்று என்றும் இதர சின்னங்களும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பாஸ்போர்ட் மீது பதிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments