நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட நடவடிக்கை

0 304

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு, தூக்குபோடும் பயிற்சி பெற்ற இரண்டு பேர் தேவை என திகார் சிறை நிர்வாகம் உத்தரப்பிரதேச அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளது. இதனால் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாயார், ஹைதராபாதில் போலீசார் என்கவுண்டர் நடத்தி பாலியல் குற்றம் புரிந்த நான்கு பேரை சுட்டுத் தள்ளியதை போல் நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகள் மீது கருணை காட்டாமல் விரைவாக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments