ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5.46 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

0 185

துபாயில் இருந்து தெலங்கானா மாநிலம் சம்சாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்த ஒவ்வொரு இருக்கைகளையும் சோதனை செய்தபோது 31 மற்றும் 32 இருக்கையின் அடியில் 14 கிலோ தங்கம், கருப்பு டேப் சுற்றி பெல்ட்டை போன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 வெளிநாட்டு பயணிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments