லா லிகா கால்பந்தாட்ட தொடருக்கான இந்திய விளம்பர தூதராக ரோகித் சர்மா நியமனம்

0 256

ஸ்பெயினின் லா லிகா கால்பந்தாட்ட தொடருக்கான இந்திய விளம்பர தூதராக, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற கால்பந்தாட்ட தொடர்களில் ஒன்றான லா லிகா, இந்தியாவில் கால்பந்தாட்டத்தை பிரபலபடுத்தும் நோக்கில் அதிரடி வீரரான ரோகித் சர்மாவை இந்தியாவிற்கான விளம்பர தூதராக நியமித்துள்ளது.

கால்பந்தாட்ட வீரர் அல்லாத ஒருவர் அத்தொடரின் விளம்பர தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே இந்தியாவில் கால்பந்தாட்டத்தை பிரபலபடுத்த அந்த அமைப்பு  பல கால்பந்தாட்ட பள்ளிகளை துவக்கியுள்ளதோடு, நடப்பாண்டிற்கான லா லிகா தொடரின் போட்டிகளை இந்திய ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் இலவசமாக ஒளிபரப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments