ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

0 318

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற வெப்சீரிசை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகின்றார். இவற்றிற்கு தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தலைவி திரைப்படத்தையும், குயின் இணையதள தொடரையும் வெளியிட தடை விதிக்க மறுத்துவிட்டார்.

குயின் தொடரில் தீபா கதாபாத்திரம் இடம் பெறவில்லை என்ற கவுதம் மேனன் தரப்பு உத்தரவாதத்தை ஏற்பதாகவும், தலைவி படம் முழுக்க கற்பனையானது என அறிவிப்பு வெளியிட பட நிறுவனத்திற்கு உத்தரவிட்டும் மனுவை முடித்து வைத்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments