70-வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார்...!

0 588

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று 70வது பிறந்தநாள்... பேருந்து நடத்துனராக வாழ்க்கையைத் தொடங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற சூப்பர் ஸ்டாராக உயர்ந்தது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்...

சூப்பர்ஸ்டார்- கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களின் மந்திரச் சொல் இது... 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கிய அவரது திரையுலகப் பயணம் இன்று வரை வெற்றிக்கொடி கட்டிப் பறக்கிறது...

ரஜினியின் நடை, உடை, பாவனை, ஸ்டைலான நடிப்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது...

ரஜினியின் படங்களில் பஞ்ச் டயலாக் இடம்பெறுவது வழக்கமாக இருந்தாலும், பாட்சா படத்தின் பஞ்ச் டயலாக்தான் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரஜினி படங்களில் எப்போதும் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. தில்லுமுல்லு, தம்பிக்கு எந்த ஊரு தொடங்கி ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் ரஜினி...

தயாரிப்பாளருக்கு வசூலை அள்ளிக் கொடுக்கும் கேளிக்கை நாயகனாக திகழ்ந்தாலும், தனது நடிப்புத் திறமையைப் பல படங்களில் அற்புதமாக வெளிக்காட்டியுள்ளார் ரஜினி..

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், நம்பியார், ஜெய்சங்கர் போன்ற மூத்த நடிகர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார் ரஜினி. சிவாஜியை பின்பற்றி நடித்ததாக பல நேரங்களில் பதிவு செய்திருக்கிறார் ரஜினி...

அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானது முதல் ஏராளமான படங்களில் கமலுடன் இணைந்து நடித்தார் ரஜினி. மிகப்பெரிய நடிகர்களாக உயர்ந்த போதிலும், 45 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் நட்பைப் போற்றி வருகின்றனர்

தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 167 படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். அன்றுமுதல் இன்றுவரை ரசிகர்களை தக்கவைத்திருப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினிதான்.

பல நேரங்களில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தினாலும், நடிகர், சூப்பர் ஸ்டார் என்ற வகையில் அனைத்து தரப்பினரின் அன்பையும், நட்பையும் பெற்றவர் ரஜினிகாந்த்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments