தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

0 235

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென்றும், 13-ஆம் தேதி அன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 73.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments