சீனா செல்லும் தமிழக அரசு உயரதிகாரிகள்..

0 255

பிரதமர் மோடி, சீன அதிபர் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக தமிழக அரசு உயரதிகாரிகள் 4 பேர் சீனா செல்லவுள்ளனர்.

மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12ம் தேதிகளில் தலைவர்கள் இருவரும் சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக சீன அதிகாரிகள் தமிழகம் வந்தனர். இதையடுத்து தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறையிலுள்ள செலவீன பிரிவு செயலாளர்  சித்திக், சிப்காட் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் உள்ளிட்ட 4 பேர் வரும் 15ந் தேதி முதல் 21ஆம் தேதி வரை பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பயணம் செய்யவுள்ளனர். 

அப்போது கிரேட்வால் மோட்டார்ஸ், ஆம்பெரக்ஸ் டெக்னாலஜி நிறுவனங்களை பார்வையிடும் அவர்கள், தமிழகத்தில் அந்நிறுவனங்கள் தொழில் தொடங்துவது குறித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments