மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

0 159

ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மாணவர்களில் முதற்கட்டமாக 100 பேருக்கு தலா 2 லட்ச ரூபாய் வீதம் கல்வி உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

அதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தார். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் 100 மாணவ, மாணவியர் அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி உதவி பெறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments