திரிபுராவில் வன்முறையை தடுக்க இணைய மற்றும் குறுஞ்செய்தி வசதிக்கு தடை

0 311

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த, திரிபுராவில் 24 மணி நேரத்திற்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அங்குள்ள மாணவர்கள் அமைப்பினர் விடுத்த அழைப்பின் பேரில், 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திரிபுராவில் சமூக வலைதளங்களில் வன்முறை தூண்டும் விதமான கருத்துக்கள் பகிரப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்து 24 மணி நேரத்திற்கு இணைய சேவையும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் நிறுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments