யோகா கலையில் சிறுமி சாதனை...!!

0 187

யோகா போட்டிகளில் ஆசிய அளவில் தங்கம் பெற்றும், ஏழ்மையின் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் செல்லமுடியாமல் தவிக்கும் கிராமத்து சிறுமி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

யோகக் கலைகளை வளர்க்க வர மத்திய - மாநில அரசுகள் பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றன. இதனிடையே, நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்துள்ள ரவணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முகம்மது நசிருதீன் என்பவரின் மகள் மிஸ்பா யோகக் கலைகளை பல அற்புதங்களில் செய்து வருகிறார்.

தன்னுடையே, இரண்டு வயதிலிருந்து யோகக் கலைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட மிஸ்பா, முதலில் மாவட்ட அளவில் பங்கற்ற போட்டிகளில் முதல் இடம் பெற்றார். அதனை தொடர்ந்து படிப்படியாக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு யோகாவில் தனிப்பெரும் சாதனைகளை படைத்து வருகிறார்.

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிகளில், தங்க பதக்கம் பெற்று காமன்வெல்த் போட்டிகளில் மிஸ்பா தேர்வாகி உள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

கேமல் போஸ், தொடர் யோகா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மிஸ்பா, கடந்த மே மாதம் ஒரே மேடையில் ஆயிரம் பேர் இணைந்து வீரப்பதிர ஆசனம் நடத்திய நிகழ்வில், 3 நிமிடங்கள் அசைவு இல்லாமல் நின்று பலரது பாராட்டை பெற்றுள்ளார்.

ஏழ்மையின் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்றும், தனக்கு அரசு உதவினால் நிச்சயம் தாய்நாட்டுக்கு பதக்கம் பெற்று தந்து பெருமை சேர்பேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார் மிஸ்பா.

யோக கலைகள் மூலம், தங்க பதக்கங்கள், விருதுகள், சான்றிதழ்கள், மற்றும் சாதனைகள் என பலவற்றையும் செய்து, தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் பாராட்டையும் பெற்றுள்ளார் மிஸ்பா. யோகக் கலைகள் மட்டுமல்லாமல் ஸ்கேட்டிங் விளையாட்டு மூலமாக பல விழிப்புணர்வுகளையும் செய்து வருகிறார்.

யோகாவின் அவசியத்தை புரிந்துக்கொண்ட மத்திய மாநில அரசுக்கள் அத்துறையில் சாதனை படைக்க விரும்பும் இதுபோன்ற மாணவச் செல்வங்களுக்கு உறுதுணையாக இருந்து கரை சேர்த்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments