312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.!

0 358

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 174 தங்கப் பதக்கம் உள்பட 312 பதக்கங்களை குவித்து இந்தியா பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் போக்கராவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. 10 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் இந்தியா, இலங்கை, பூடான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 2715 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இறுதி நாள் போட்டியிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் திறமையை நிரூபிக்க தவறவில்லை. குத்துச் சண்டைப் போட்டியில் மட்டும் 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர்.

பெண்கள் பிரிவில் 51 கிலோ எடை கொண்டவர்களுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பின்கி ராணி, நேபாள வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மேலும் சோனியா, மன்சு பம்போரியா ஆகிய இந்திய வீராங்கனைகளும் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

ஆண்கள் பிரிவு குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்பர்ஷ்குமார்,  கிருஷ்ணன் விகாஸ், நரேந்திரா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். 

கூடைப்பந்து போட்டியிலும் இந்திய ஆண்கள் மற்றும் பெண் அணி தலா ஒரு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 

174 தங்கம், 93 வெள்ளி உள்பட மொத்தம் 312 பதக்கங்களை குவித்து இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 50 தங்கம் உள்பட 206 பதக்கங்களுடன் நேபாளம் இரண்டாவது இடத்திலும், 40 தங்கம் உள்பட 251 பதக்கங்களுடன் இலங்கை மூன்றாவது இடத்திலும் உள்ளன.

போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில் நேபாள துணை பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments