வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை மேலும் குறைவு

0 518

வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் நேற்று 1 கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம், இன்று 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சின்ன வெங்காயத்தின் விலை 10 ரூபாய் குறைந்து 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆந்திரா வெங்காயம் 60 முதல் 80 ரூபாய் வரையும், புதிதாக வந்துள்ள எகிப்து வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தக்காளி 5 ரூபாய் குறைந்து 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 5ரூபாய் குறைந்து 40 ரூபாய்க்கும், அவரைக்காய் 5 ரூபாய் குறைந்து 50 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 5 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பீட்ரூட் 5 ரூபாய் அதிகரித்து 35 ரூபாய்க்கும் முள்ளங்கி 10 ரூபாய் அதிகரித்து 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments