சென்னையில் பழங்களின் விலை குறைவு

0 458

சென்னையில் வரத்து அதிகரிப்பால் பழங்களின் விலை குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் 80 ரூபாய்க்கு விற்பனையான கமலா ஆரஞ்சு தற்போது 50 ரூபாய்க்கும், 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இமாச்சல பிரதேச ஆப்பிள் தற்போது 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் 60 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சப்போட்டா பழம் 40 ரூபாயாகவும், 90 ரூபாய்க்கு விற்பனையான கொய்யாப்பழம் 60 ரூபாயாகவும் குறைந்துள்ளது. அதே போல் சீதாபழம், கருப்பு திராட்சை, மாதுளை உள்ளிட்ட பழங்களின் விலையும் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஜனவரி மாதம் வரை பழங்களின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments