2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு

0 608

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று வெளியாகும் செய்திகள் தவறானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணமதிப்புநீக்க நடவடிக்கைக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை இப்போது அதிகமாக ஏ.டி.எம்.எந்திரங்களில் காண முடிவதில்லை. இந்த நோட்டுக்களை அச்சடிக்கும் வேலை ஒரளவு குறைக்கப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தரப்பிலும் கூறப்பட்டது.

எனவே, 2000 ரூபாய் நோட்டுகள் எந்த நேரத்திலும் செல்லாதவைகளாக அறிவிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் ஆகி விடும் என மக்கள் கவலைப்படத் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் நோட்டுக்களின் பயன்பாடு குறைந்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது என்றார் அவர், கடந்த நிதி ஆண்டில் 3 ஆயிரத்து 313 கோடி ரூபாய் அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments