மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை

0 245

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறுவதை யொட்டி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள ராஜாஜி பவன் கூட்டரங்கில், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில தேர்தல் அதிகாரி பழனிசாமி, தேர்தல் விதிமுறைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விளக்கினார்.

பின்னர், வாக்காளர்கள் ஓட்டளிக்கும் போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments