குறைந்து வரும் வெங்காயம் விலை..!!

0 424

சென்னை கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பின் காரணமாக, பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைந்து, இன்று ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையானது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மற்றும் சோலாபூரில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு 15 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம், இன்று 120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சின்ன வெங்காயம் நேற்று ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 150 ரூபாயாக குறைந்தது.

இதேபோன்று ஆந்திரா வெங்காயம் 60 முதல் 80 ரூபாய்வரை விற்பனை ஆகிறது. மேலும், புதிதாக வந்துள்ள எகிப்து வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவரை, எகிப்தில் இருந்து சென்னைக்கு 60 டன் வெங்காயம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெங்காயம் விலை படிப்படியாக குறையும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments