விரைவில் மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 240

விரைவில் மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பல்மருத்துவ அகாதமியின் மாநாடு சென்னை பூந்தமல்லி வேலப்பஞ்சாவடியில் உள்ள சவிதா மருத்துவ கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறையில் 2030-ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை தற்போதே தமிழகம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டார்.

பின்னர் பேட்டியளித்த அமைச்சர், புதிதாக உருவாக்கப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளில் 85 சதவிகித இடத்தை தமிழக மாணவர்கள் பெறுவார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments