குடியுரிமை சட்டத் திருத்தம் தேச நலனுக்குத் தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்

0 211

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, இந்தியாவின் நலனுக்கும், தமிழ்நாட்டின் நலனுக்கும் உகந்த, தேவையான ஒன்று, என முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, பாஜக தேசியச் செயலாளர் முரளிதர ராவ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக பட்டியல் வைத்திருப்பதாக விமர்சித்த பொன்.ராதாகிருஷ்ணன், தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகவே உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments