ஜீரோ டே பிரச்சனை இனி கிராஃப் ரெய்டனிலும்

0 301

கேப் டவுனை தொடர்ந்து கிராஃப் ரெய்டனிலும் தண்ணீர் பிரச்சனை
தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.உணவு கூட இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட வாழமுடியாது.

மனித உடல் 60 சதவீத நீரால் ஆனவை.இன்றைய நிலையை எடுத்துக்கொண்டால் தண்ணீரை கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருகிறோம்.இந்த பிரச்சனை இந்தியாவுகு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளின் முக்கிய பேசும் பொருளாக மாறிவிட்டது.இதற்கான முன்னேற்பாடுகள் உலக அரங்கில் எடுத்து வைத்தாலும் இன்றைய நிலமைக்கு அது பத்தோடு பதினொன்று தான்.

காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஜீரோ டே வாட்டர் பிரச்சனையை சந்தித்த கேப் டவுன் இப்பொழுது தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிராஃப் ரெயிண்ட் நகரமும் சந்தித்து வருகிறது. 40 லட்ச மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய Nqweba Dam முற்றிலும் வரண்டு விட்டது.

image

கடந்த 5 ஆண்டுகளாக மழைபொழிவே இல்லை என்பது தான் நிதர்சனம்.இதனால் பல கால்நடைகள் மற்றும் மீன்கள் செத்து வீழ்கிறது.நீர் பிரச்சனையை காரணம் காட்டி இங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மக்கள் பெரிது நம்புவது ஆழ்துளை கிணறுகளே.இதுவரை 1800 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு இருக்கிறது.நிலத்தடி நீரும் வற்றக்கூடியவை தான். அதுவும் வற்றிவிட்டால் இந்தமக்களின் நிலை கேள்விக்குறியே.இதனை கருத்தில் கொண்ட அந்நாட்டுஅரசும்,ஐ.நா-வும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments