108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது

0 137

சென்னையில் முறைகேடு புகாரில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர், நிர்வாகத்துக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நாகையைச் சேர்ந்த வில்லியம்ஸ் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனியார் மருத்துவமனையுடன் பேரம் பேசி நோயாளிகளை அனுமதித்து கமிஷன் பெற்றுக்கொள்வதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து அவரை நிர்வாகம் பணி இடை நீக்கம் செய்தது. இதையடுத்து அவர் நிர்வாகத்துக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின்பேரில்  வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார் வில்லியம்சை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments