நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ

0 207

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ, பற்றி எரிந்து வரும் நிலையில், சிட்னி நகரம் முழுவதும் புகை மண்டி காணப்படுகிறது.

இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தொடர் புதர் தீயால், அங்கு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், தீயை அணைக்கும் பணியில் 1,600 குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறினர்.

இந்நிலையில், சிட்னியில் உள்ள கோல்டன் கடற்கரை, புதர் தீ காரணமாக, கறுப்பு நிறமாக காட்சியளிக்கிறது. மேலும் கடற்கரை ஓரத்தில் கறுப்பு நிற சாம்பலும் கரை ஒதுங்குகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments