உராங்குட்டான்கள் பயன்படுத்தும் 11 வகை சப்தங்களின் உண்மைத் தன்மை கண்டுபிடிப்பு

0 241

உராங்குட்டான் வகை குரங்குகள் பயன்படுத்தும் 11 வகையான சப்தங்களின் உண்மைத் தன்மையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனேஷியா அருகில் உள்ள போர்னியோ தீவில் அதிகளவில் உராங்குட்டான் வகை குரங்குகள் வசித்து வருகின்றன. குரங்குகளின் தொடர்பியல் குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் முத்தமிடுவதற்கும், தன்னுடன் பின்னால் வருவற்கு மற்ற குரங்குகளுக்கு உத்தரவிடுவதற்கும், எதிராளியைக் கண்டதும் அமைதியாக இருக்கும்படியும், மரத்தின் உச்சிக்கு செல்லுமாறு கூறுவற்கான ஒலிப்பதிவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உராங்குட்டான் குரங்குகள் மொத்தம் 1,300 வகையான சமிக்ஞை மற்றும் ஒலிவகைகளை எழுப்புவதையும், இதில் 858 ஒலிகள் ஒன்றை மற்றொன்று தொடர்பு கொள்வதற்கும் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments