சாலை விபத்தில் பைக்கில் சென்றவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் ஆவேசம், லாரிகளுக்கு தீ வைப்பு

0 262

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் ஜகதீஷ்புர் எனுமிடத்தில் ஒரு சரக்கு லாரியை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். அந்த லாரி பைக்கில் சென்ற நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் விபத்தில் சிக்கியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் சரக்கு லாரியை சூறையாடினர். பின்னர் அந்த லாரிக்கு தீ வைக்கப்பட்டது.

அங்கிருந்த மற்ற லாரிகளுக்கும் தீ வைக்கப்பட்டதால் பத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தீயில் கருகின. 50 லாரிகள் சூறையாடப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டதை அறிந்த போலீசார், ஊர்மக்களை சமாதானப்படுத்த முயன்றபோது அவர்கள் மீதும் கற்களை வீசினர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments