அயோத்தியில் மசூதி கட்ட நிலம் ஒதுக்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு

0 482

அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில பாரத இந்து மகாசபா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் என்பவர் நேற்று இந்த மனுவைத் தாக்கல் செய்தார். அதில், முஸ்லீம்கள் தங்களுக்கு வேறு இடம் வேண்டும் என்று கேட்காத நிலையில் அவர்களுக்கு நிலம் ஒதுக்கியது தவறு எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா என்று அறிவிக்கப்படவில்லை. முன்னதாக அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் மசூதி இடிக்கப்பட்ட நிலத்தில் கோயில் கட்டிக் கொள்ளவும், புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் தீர்ப்பளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments