அவதூறு வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு பதில் மனு

0 223

அவதூறு வழக்குகளில் தனி நபர்களை விமர்சித்தார்களா? அவர்களின் அரசு பணியை விமர்சித்தார்களா? என்பதை, சிறப்பு  நீதிமன்ற விசாரணைக்கு பிறகே முடிவெடுக்க வேண்டுமென  தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள அவதூறு  வழக்குகளை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் உள்ளிட் அரசியல் கட்சியினர், எம்.பி. - எம்.எல்.ஏ.கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விமர்சித்தால் அது அவர்களது பொறுப்பையும், அரசையும் விமர்சித்ததாக தான் கருத முடியும் என வாதிட்டார். அரசின் பதில் மனுக்களை பதிவு செய்த நீதிபதி,  பதில் மனு தாக்கல் செய்யாத வழக்குகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments