டிசம்பரில் மட்டும் வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை

0 452

டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கு, அரசு விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகள், 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாகும். அந்தவகையில் எந்த மாதமும் இல்லாத வகையில் இம்மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. டிசம்பர் 14ம் தேதி 2வது சனிக்கிழமையும், 28ம் தேதி 4வது சனிக்கிழமையும் வருகின்றன.

இதனிடையே 25 தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. அதற்கடுத்த நாளான 26ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கும் பாக்சிங் தினமும் வருகிறது. இதனால் மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை வருவதால், வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments