டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் சென்றது இலங்கை அணி

0 252

குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.

இஸ்லாமபாத் விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 11-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 19-ந்தேதி கராச்சியில் நடக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இழந்தது. 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments