ஜேஎன்யூ மாணவர்கள் மீது தடியடி...

0 299

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதி கட்டண உயர்வை கண்டித்து, குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

அண்மையில், பல்கலைக்கழகத்தின் விடுதி கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க வேண்டி,அவரது மாளிகை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மாணவர்கள் கலைந்து செல்லும்படி கூறி தடியடி நடத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments