சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங். மகளிர் அமைப்பினருக்கு 1 கிலோ வெங்காயம் பரிசு

0 164

வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

சோனியா காந்தியின் 73வது பிறந்தநாள் விழாவை புதுச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மகளிர் அமைப்பினருக்கு ஒருகிலோ வெங்காயத்தை முதலமைச்சர் நாயராணசாமி பரிசளித்தார். தொடர்ந்து, மணக்குள விநாயகர் கோயிலில் தங்கத்தேர் இழுத்தும் காங்கிரஸ் கட்சியினர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments